Monday, 3 September 2018

கருப்பு தான் அழகு

வெளிச்சத்தின் அழகு


வெளிச்சத்தை ஏன் கண்டுபிடித்தான்?
நீ தூங்கும் அழகை இரவில் காணதானோ!!

வானும் பெண்ணும் ஒன்று!


செம்மையாய் மாறியது வானம்...
உன் கோபம் வெளியேறியதனால் !!!

மழைநீரை பொழிந்தது வானம்...
உன் கருணை வெளியேறியதனால் !!! 

நீலமாய் தோன்றியது வானம்...
உன் சிரிப்பு வெளியேறியதனால் !!!

மேகங்களால் சூழ்ந்தது வானம்...
உன் வெட்கம் வெளியேறியதனால் !!!